உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்- அமைச்சர் வழங்கினார்

Published On 2023-01-07 10:32 GMT   |   Update On 2023-01-07 10:32 GMT
  • நவம்பர் 11-ம் தேதி மட்டும் 52 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
  • சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணம்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 40031 விவசாயிகளுக்கு, ரூ.43.92 கோடி இடுபொருள் நிவாரண தொகையினை கொள்ளிடம் ஊராட்சி கடவாசல், சீர்காழி ஊராட்சி ஒன்றியம் பெருந்தோட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் கீழையூர் உப்புச் சந்தை மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டு தலின்படி வடகிழக்கு பருவமழையால் பாதிக்க ப்பட்ட விவசா யிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது.

கடந்த நவம்பர் 11ஆம் தேதி 24 மணி நேரத்தில் 52 சென்டிமீட்டர் மழை அளவு ஒரே இரவில் பதிவானது. இதனால் மிகுந்த சேதம் ஏற்பட்டுது. குறிப்பாக கொள்ளிடம்சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழப்பட்டு பாதிப்புக்குள்ளானது.

பாதிப்புகளை சரி செய்ய முதலமைச்சரின் உத்தரவுபடி அமைச்சர்கள் இப்பகுதியில் முகாமிட்டு 72 மணி நேரத்தில் மின் துண்டிப்பு மற்றும் அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டன. இந்தியாவில் தலைசிறந்த சிறந்த முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார்.

முதலைமேடு திட்டு, நாதல்படுகை ஆகிய இடங்களில் தலா ரூ.3 கோடி செலவில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தியாவில் வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் கொண்டுவந்தவர் நமது தமிழக முதல்வர் ஆவார். வேளாண்மைக்கு மட்டும் ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்களை பாதுகாக்கும் முதல் - அமைச்சராக நமது தமிழக முதலமைச்சர் உள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. 122 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்தது. குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி, வட்டங்களில் விவசாய நிலங்கள் மிகவும் சேதமடைந்தன சேதம் அடைந்த பகுதிகளை உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த (14-11-2022) நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழக முதல்வர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு சென்னை திரும்புவதற்கு முன்பாகவே சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1000 நிவாரண உதவி தொகை அறிவித்தார்கள். உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News