உள்ளூர் செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்

Published On 2023-02-12 07:08 GMT   |   Update On 2023-02-12 07:08 GMT
  • பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளது.
  • பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம்:

தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பெய்த பருவம் தவறிய தொடர் கனமழையால் 80 சதவீதம் சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே அமைச்சர்கள் குழுவை ஆய்வு நடத்த கூறி நிவாரண தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக அரசின் வேளாண்மைத் துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிக ளிலும் சம்பா சாகுபடி பயிரிடப்பட்ட அளவு, அறுவடைச் செய்யப்பட்ட அளவு மற்றும் பாதிக்கப்பட்ட அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அளவீடுகள் எவ்வாறு எடுக்கப்பட்டதென தெரியவில்லை.

பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டு குறிப்பிட்ட அளவுகளுக்குள் மட்டுமே பாதிப்படைந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது போல பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு அதிகாரிகள் உண்மையாக நேரடிக் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News