உள்ளூர் செய்திகள்

மதுவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

மதுவால் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவர்கள் மீட்பு

Published On 2023-03-13 09:43 GMT   |   Update On 2023-03-13 09:43 GMT
  • மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
  • நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோரின் உத்தரவின்படியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படியும், நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தரராஜன் தலைமையில் ஆன மீட்பு குழுவினர் விஜயா, சக்திபிரியா, சரவணன், பாலா ஆகியோர் அனைவருக்கும் உரிய முன்னறிவிப்பு கொடுத்த பிறகு நேரில் சென்று நீண்ட நாட்களாக புகையிலை, மது பழக்கத்தினால் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிவதுடன் பொதுமக்க ளுக்கும் தொந்தரவும் இடையூறும் செய்து கொண்டிருந்த மூன்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மீட்டெடுத்து நம்பிக்கை மனநலக் காப்பகத்தில் மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.முதலில் என்கன் ஊராட்சிக்கு சென்று மது அருந்தி மனநலம் பாதிக்கப்பட்ட குமரவேல் என்பவரை குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீட்டனர்.

இதேப்போல் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை முன்னிலையில் திருவாரூர் பைபாஸ் ரோட்டில் முகவரி தெரியாத மனநல பாதிக்கப்பட்டவரையும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் குணா மற்றும் நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.இப்பணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பெக்டர் மணிமேகலையை சந்தித்து உரிய ஆவணம் பெற்று மூன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களையும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

Tags:    

Similar News