உள்ளூர் செய்திகள்

பொத்தனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலம் அறநிலைத்துறை சர்வேயர்கள் மூலம் அளந்தபோது எடுத்த படம் .

கோவில்களுக்கு சொந்தமான நிலம் மீட்பு

Published On 2022-07-20 08:51 GMT   |   Update On 2022-07-20 08:51 GMT
  • தமிழக அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்பு
  • கோவில் நிலங்கள் அனைத்தும் சர்வேயர் மூலமாக அளந்து மீண்டும் கோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழக அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் தேவராய சமுத்திரம் ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீ சிவன் கோவில்,ஸ்ரீ பொன்னாச்சி அம்மன் கோவில், ஸ்ரீ பட்டத்தரசி செல்லாண்டியம்மன் கோவில் ,ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆகிய கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து மீட்கக்கோரி இந்து சமய அறநிலைத்து றைக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்படி நேற்று கோவில் நிலங்கள் அனைத்தும் சர்வேயர் மூலமாக அளந்து மீண்டும் கோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டது.

Tags:    

Similar News