உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய ஓசூர் வாலிபர் உள்பட 2 பேர் கைது

Published On 2022-10-06 15:19 IST   |   Update On 2022-10-06 15:19:00 IST
  • கிருஷ்ணகிரி நமாஸ் பாறை மேம்பாலம் அருகில் ரோந்து சென்ற போது, அவ்வழியே சென்று கொண்டிருந்த மினி கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
  • 50 கிலோ அளவிலான, 300 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது.

கிருஷ்ணகிரி,

தமிழக எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரி வழியாக அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, அவற்றை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சென்னை - பெங்க ளூர் தேசிய தேசிய நெடுஞ்சா லையில் கிருஷ்ணகிரி நமாஸ் பாறை மேம்பாலம் அருகில் ரோந்து சென்ற போது, அவ்வழியே சென்று கொண்டிருந்த மினி கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், 50 கிலோ அளவிலான, 300 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது.

இந்த அரிசியை காஞ்சிபுரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு கடத்தி சென்றது தெரிந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசியுடன் கன்டெய்னர் லாரியை கிருஷ்ணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்த அதிகாரிகள், இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கலைச்செல்வனுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வஜீர்கான்(28), காஞ்சிபுரம் சுரேஷ்(34) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News