உள்ளூர் செய்திகள்
வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை
- சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஆற்காடு:
ஆற்காடு அருகே சிவ ஆலயத்தில் வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடந்தது.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சிவ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.