உள்ளூர் செய்திகள்

வேன் மீது லாரி மோதி டிரைவர் பலி

Published On 2023-06-09 15:33 IST   |   Update On 2023-06-09 15:33:00 IST
  • படுகாயமடைந்த கிளீனருக்கு தீவிர சிகிச்சை
  • போலீசார் விசாரணை


ராணிப்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (21) வேன் டிரைவர். அதே வேனில் கிளீனர் வேலை பார்ப்பவர் பிரவீன்குமார்(19).

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லோடு வேனில் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு சென்னை கோயம்பேடு நோக்கி செல்வதற்காக வந்தனர் .

ராணிப்பேட்டையில், சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் வந்த போது திடீரென வேனின் பின்பக்க டயர் பழுதடைந்துள்ளது.

இதை தொடர்ந்து வேனை நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி லோடு வேன் மீது மோதியது.

இதில் வேன் டிரைவர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காயமடைந்த கிளீனர் பிரவீன்குமார் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News