உள்ளூர் செய்திகள்
மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல்
- தாசில்தார் ரோந்து பணியில் சிக்கியது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவுக்கு தொடர்ந்து புகார் வந்தது.
அதையடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில் அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அரக்கோணத்தை அடுத்த சித் தூர் கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பதிவெண் இல்லாத டிராக்டர் அருகே சென்று பார்த்தபோது டிராக்டரில் மணல் இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து டிராக்டரை கைப்பற்றி தக்கோலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.