உள்ளூர் செய்திகள்

கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது

Published On 2022-12-25 08:43 GMT   |   Update On 2022-12-25 08:43 GMT
  • பாண்டோகிராப் கருவி உடைந்ததால் கோளாறு
  • பயணிகள் 2 மணி நேரம் அவதி

அரக்கோணம்:

சென்னை சென்டிரலில் இருந்து கோவை வரை செல் லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30-க்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

ரெயில்திரு வள்ளூர் மாவட்டம் திருவா லங்காடு ரெயில் நிலையத்தை கடந்த போது என்ஜினின் மேல் பகுதியில் உயர் அழுத்த கம்பியில் உரசியவாறு வரும் மின்சாரத்தை சேகரிக்கும் 'பாண்டோகிராப்' என்ற கருவி உடைந்து சேதமானது. இதனால் ரெயில் இயங்கமுடியாமல் நடு வழியிலேயே நின்றது.

இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து ரெயில்வே மின்துறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-பெங்களூரூலால் பார்க் எக்ஸ்பிரஸ், சென்னை ஹூப்ளி வாராந்திர எக்ஸ் பிரஸ் ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்களும் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன.

2 மணி நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. அதன்பின் மற்றரெயில்களும் புறப்பட்டன. இந்த தாமதத் தால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News