உள்ளூர் செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-04 09:47 GMT   |   Update On 2022-11-04 09:47 GMT
  • ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது
  • 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் லக்கி லாரன்ஸ் புவியரசு தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைக்கால ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 1.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் முடக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மாணவர்கள் நலன் கருதி தேவையற்ற இணையவழி பதிவு பதிவேடுகளை நிறுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வட்டார அளவிலான நிர்வாகிகள், மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News