உள்ளூர் செய்திகள்
மாணவர்களுக்கு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- 74 மாணவர்கள் பயனடைந்தனர்.
- புத்தகங்களும் வழங்கினர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கினர்.
கீழ்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரவின் குமார் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 74 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் கீழ்குப்பம் ஊராட்சி துணைத்தலைவர் அமுதா ராமமூர்த்தி வார்டு உறுப்பினர்கள் கோகுல்ராஜ் சுமதி ஜெயராமன் நதியா கௌதம் ஜெயந்தி நானும் மூர்த்தி பூர்ணிமா மாரியப்பன் வெங்கடேசன் ஜான்பீட்டர் ஜெயக்குமார் மற்றும் பெற்றோர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.