உள்ளூர் செய்திகள்
பொன்னியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
- பக்தர்கள் அலகு குத்தி பூந்தேர் இழுத்து நேர்த்திக்கடன்
- ஏராளமானோர் சாமி தரிசனம்
நெமிலி:
நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் பொன் னியம்மன், தக்காளியம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா நடைபெற்றது. முன்னதாக பொன்னியம்மன், தக்காளி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி பூந்தேர் இழுத்தனர். இதைதொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.
பின்பு பொன்னியம்மன், தக்காளியம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கிராமத்தின் அனைத்து வீதிகளி லும் ஊர்வலமாக வந்தனர்.
அப்போது ராஜ மேளம் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.