உள்ளூர் செய்திகள்

சாலையோரம் குவியலாக இருக்கும் மண்மேடுகள்

சாலையில் உள்ள மண் குவியல்கள்

Published On 2022-07-08 11:11 GMT   |   Update On 2022-07-08 11:11 GMT
  • போக்குவரத்து பாதிப்பு
  • விபத்து ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தல்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த ஓச்சேரி இல் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சித்தஞ்சி சிவ காளி பீடம் அமைந்துள்ள பகுதியில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மண் குவியல்கள் மற்றும் ஏற்கனவே போடப்பட்ட தார் சாலையை தோண்டி எடுத்து சாலை ஓரம் கொட்டப் பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் சாலை குறுகலாக உள்ளதால் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கல் அங்கு வரும்போது விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

பலமுறை அப்பகுதி மக்கள் எடுத்துச் சொல்லியும் அவற்றை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை மெத்தனம்காட்டுகிறது. மேலும் விபத்துகள் ஏர்படாமல் தடுக்க அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News