உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்த படம். 

ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி ஆய்வு

Published On 2022-06-15 09:23 GMT   |   Update On 2022-06-15 09:23 GMT
  • 20-ந்தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
  • விழா மேடை ஏற்பாடு செய்யபட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை வருகின்ற 20-ந்தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி இன்று பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட புதிய அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் ஜூன்.20ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதையொட்டி பள்ளி மைதானத்தில் விழா மேடை ஏற்பாடு செய்யபட்டுள்ளதையும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் காந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கோட்டாட்சியர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், தாசில்தார் ஆனந்தன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News