உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் வளர்மதி, எஸ்.பி. கிரண் ஸ்ருதி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவி

Published On 2023-03-15 08:38 GMT   |   Update On 2023-03-15 08:38 GMT
  • அமைச்சர் காந்தி வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி, 17 பயனாளிகள் மற்றும் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 9 ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் உள்ளாட்சிக்கு முக்கியத்துவம் அளித்து மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகின்றார். மேலும் உள்ளாட்சிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டுமென அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் திட்டப்பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை தன்னிடம் தெரிவிக்கு மாறும் பின்னர் மாவட்ட கலெக்டரிடம் தெரியப்படுத்தி அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

முதலமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கிட வேண்டும். அதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பை பையினை பயன்படுத்திட அறிவுருத்திட வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியாக திகழ வேண்டும். மக்களுக்கான திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தரத்தில் எந்த ஒரு சமரசமும் இருக்கக் கூடாது. தரமானதாக இருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தங்களுக்கு பதவி கிடைத்திருக்கிறது என எண்ண வேண்டாம்.

மக்கள் உங்களுக்கெல்லாம் ஒரு பொறுப்பினை வழங்கியுள்ளார்கள் என எண்ணி அதனை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு அரசின் திட்டப்பணிகளை நிறைவேற்றி, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

முதலமைச்சர் மக்க ளுக்கு என்னவெல்லாம் செய்ய நினைக்கின்றாரோ அதனை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News