உள்ளூர் செய்திகள்
கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
- சிறையில் அடைத்தனர்
ஆற்காடு:
ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன்போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆற்காடு அண்ணாநகர் மாசாபேட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்கிற பகுடு பாஸ்கர் (வயது 33) என்பவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் பாஸ்கரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக் டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.