உள்ளூர் செய்திகள்

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீரில்ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் பொதுமக்கள்.

பனப்பாக்கம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்

Published On 2022-10-26 15:46 IST   |   Update On 2022-10-26 15:46:00 IST
  • ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள்
  • மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து 36 கண் மதகு வழியாக வெளியேறும் தண்ணீரின் அளவு கடந்த 2 நாட்களாக அதிகமாக செல்வதால் கர்ணாவூர் ஆலப்பாக்கம் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

சுற்றுவட்டார பகுதியில் இருந்து பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்

தரைப் பாலத்திற்கு மேலே 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் இருசக்கர வாகனமும் சைக்கிளில் செல்பவர்களும் மிகுந்த போராட்டத்திற்கு பின்னரே பாலத்தை கடந்து செல்கின்றனர்

மேலும் இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைப்பது குறித்து பலமுறை தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்

அதிகமாக தண்ணீர் சென்றால் பனப்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் செல்பவர்கள் 12 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஏற்கனவே கடந்த வருடம் தரை பாலத்தை கடந்த போது 2 வாலிபர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். அதேப்போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News