உள்ளூர் செய்திகள்

பேனர் வைக்க மாவட்ட நிர்வாக அனுமதி கட்டாயம்

Published On 2023-06-10 13:16 IST   |   Update On 2023-06-10 13:16:00 IST
  • கலெக்டர் எச்சரிக்கை
  • 6 நாட்களுக்கு மட்டுமே அனுமதி

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும்பாலும் அனுமதியின்றி தற்காலிக ப்ளக்ஸ் பேனர்கள் அச்சிடுவது மற்றும் உரிமம் இன்றி விளம்பர பதாகைகள் அமைப்பது அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினர், கோவில் விழா குழுவினர், பல்வேறு வகையான சங்க அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் உரிய அனுமதியின்றி, உரிமம் இன்றி விளம்ப ரப்பதா கைகள், ப்ளக்ஸ் பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

இனி வரும் காலங்களில் தற்காலிக ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க விரும்புவோர் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் உரிய படிவத்தில் பேனர் வைக்க உத்தேசித்துள்ள நாட்களுடன், அதில் இடம் பெறும் வாசகங்களையும் குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும்.

இந்த அனுமதிகள் அதிகபட்சமாக 6 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். நிகழ்வு முடிந்தவுடன்,காலக்கெடு முடிவுற்றவுடன் அதனை அனுமதி பெற்ற நபரே அகற்றிட வேண்டும்.

எந்தவொரு நபரும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய முன் அனுமதி பெறாமல் மாவட்டத்தின் எந்தவொரு இடத்திலும் நிரந்தர விளம்பர ப்பலகைகள் தற்காலிக ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ப்ளக்ஸ் பேனர்கள் அச்சிடுவோர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வழங்கப்படும் ப்ளக்ஸ்கள் மட்டுமே அச்சிட வேண்டும், அனுமதியின்றி அச்சிடக்கூ டாது, மீறி செயல்படுவோர் மீது விதிமுறைகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News