உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்றகோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா

Published On 2023-10-13 08:16 GMT   |   Update On 2023-10-13 08:16 GMT
  • புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
  • கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்

ராணிப்பேட்டை:

சோளிங்கர் அருகே உள்ள செங்கல் நத்தம் ஊராட்சி, ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 40 பேர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமாபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளனர். இது சம்பந்தமாக ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீட்டை காலி செய்ய உத்தர விட்டனர். இருப்பினும் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வருகின்றனர்.

புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மேலும் கிராமத்திற்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அரசு உத்தரவு பெற்று பணி நடைபெறும் நிலையில் அதையும் தடுத்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி போதுமானதாக இல்லாததால் விவசாய நிலத்தில் பயிர் அறுவடை செய்யும் எந்திரங்களை எங்கள் ஊர் வழியாக வர முடியாமல் வேறு வழியாக விவசாய நிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளவர்களை காலி செய்து எங்கள் பகுதிக்கு சாலை மற்றும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தனர்.

இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.

Tags:    

Similar News