உள்ளூர் செய்திகள்
பாழுடைந்து கிடக்கும் கிணற்றை படத்தில் காணலாம்.
- ெபற்றோர் அச்சம்
- தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் சந்தை மேட்டில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது. பல ஆண்டுகளாக ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திறந்தவெளி தரைகிணறு உள்ளது.
கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தடுப்புச்சுவர் உயரம் குறைவாக இருப்பதோடு எப்போதும் திறந்து கிடப்பதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்கள் அச்சமடைகின்றனர்.
எனவே பயனற்று கிடக்கும் கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பெற்றோர்களும் மற்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.