உள்ளூர் செய்திகள்
வாலாஜாவில் காங்கிரசார் ஆர்பாட்டம் செய்த போது எடுத்த படம்.
வாலாஜாவில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலையை எதிர்த்து நடந்தது
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
வாலாஜாபேட்டை காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை காந்தி சிலை அருகே நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ அசேன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மணி, மாவட்ட நிர்வாகி நியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பதை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி காங்கிரஸார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 40-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.