எல்லை பாதுகாப்புப் படைவீரர் தூக்கிட்டு தற்கொலை
- 20 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 31). ஒடிசாவில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக வேலை செய்து வந்தார். கவர் 20 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது மனைவி மற்றும் 2 மகள்கள் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஜானகிராமன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைபார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் திமிரி போலீசார் மற்றும் அவரது மனைவி ராசாத்திக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஜானகிராமனின் தற்கொலைக்கான 'காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.