கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவாக இருந்த ரவுடி கூட்டாளிகளுடன் கைது
- வாகன சோதனையின் போது பிடிப்பட்டனர்
- கார் மற்றும் 1 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் - காஞ்சிபுரம் ரோடு ரெயில்வே மேம்பாலம் பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சால மன்ராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அந்தவழியாக பதிவு எண் இல்லாத கார் வந்தது. அதனை மடக்கி காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரக்கோணத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 25) மற்றும் சிவ பிரகாசம் (35), சுரேஷ் (22) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காரில் சோதனை செய்ததில் 1கிலோ 300 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து 3 பேரையும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் சசிகுமார் அரக்கோணம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்ததும், சிவபிரகாசம் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.