உள்ளூர் செய்திகள்
ஆயுதபடை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி
- நினைவு சின்னத்திற்கு மலர்வளையம் வைத்தனர்
- 63 குண்டுகள் முழங்கிட அரசு மரியாதை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமை தாங்கி பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் நினைவு சின்னத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் 63 குண்டுகள் முழங்கிட போலீசார் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குமார், ரவிச்சந்திரன், பிரபு, சுரேஷ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்று பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தினர்.