உள்ளூர் செய்திகள்

தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்து

Published On 2022-11-11 15:15 IST   |   Update On 2022-11-11 15:15:00 IST
  • பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
  • வாலாஜா அரசு கல்லூரி அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது

வாலாஜா:

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவில் தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.

அப்போது வாலாஜா அரசு கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது பணி மூட்டத்தினால் அரசு பஸ் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் ஏறி நின்று விபத்துக்குள்ளானது.

இதில் பஸ் முன் பக்க சக்கரங்கள் கழண்டு தனியாக விழுந்தது. இந்த விபத்தில் பஸ் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு சிறிது காயங்ளுடன் உயிர் தப்பினர்.

இதையடுத்து விபத்துக்குள்ளான அரசு பஸ்சை தனியார் பொக்லைன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News