உள்ளூர் செய்திகள்

லோக் அதாலத் மூலம் 77 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-10-15 14:17 IST   |   Update On 2023-10-15 14:17:00 IST
  • பயனாளிகளுக்கு இழப்பீடாக வழங்கி நீதிபதிகள் உத்தரவு
  • ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்தது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு 2-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிபதி ஜெயசூர்யா, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி நவீன் துரைபாபு ஆகியோர் தலைமை தாங்கினார்.

இதில் வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 28), கட்டிட மேஸ்திரி.

கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி பஸ் மோதி உயிரிழந்தார.

இது தொடர்பாக சுபாஷின் குடும்பத்தினர் ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்டில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 22 லட்சத்து 50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டு அதற்கான ஆணையை சுபாஷின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து மோட்டார் வாகன விபத்து, அசல் மற்றும் வங்கி வழக்குகள் என மொத்தம் 77 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 30 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை பயனாளிகளுக்கு இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News