உள்ளூர் செய்திகள்
மணல் கடத்திய 7 வாகனங்கள் பறிமுதல்
- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பல்லூர் பகுதியில் உள்ள கொசஸ் தலை ஆற்றில் கள்ளத்தனமாக மணல் கடத்தப்படுவதாக அரக்கோணம் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் விரைந்து சென்ற வருவாய் அலுவலர்கள் மினி வேனில் மணல் கடத்திய நபரை கைது செய்தனர். பறிமுதல் செய்து மணலுடன் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இதேபோன்று கீழ் வெங்கடாபுரம் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியும், பனப்பாக்கம் கிராமத்தில் 5 மாட்டு வண்டிகளும் கைப்பற்றப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
மொத்தத்தில் மணல் கடத்திய ஒரு மினி வேன் உட்பட ஆறு மாட்டு வண்டிகளை அதிரடியாக வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.