உள்ளூர் செய்திகள்

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பள்ளியில் ஆய்வு செய்த காட்சி.

சாக்லேட் சாப்பிட்ட 24 மாணவர்கள் மயக்கம்

Published On 2022-11-18 15:26 IST   |   Update On 2022-11-18 15:26:00 IST
  • ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி
  • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

நெமிலி:

நெமிலி அடுத்த சயனபுரத்தில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் 163 மாணவர்கள படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 4-ம் வகுப்புபடித்து வரும் மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கியுள்ளார்.

சாக்லேட்டை சாப்பிட்ட 1 மணிநேரந்தில் மாணவர்கள் 24 பேர் தங்களுக்கு வயிற்றுபோக்கு மயக்கம் ஏற்படுவதாக ஆசிரியை விசாலாட்சியிடம் தெரிவித்தனர்.

உடனே அதிர்ச்சியில் அவர் தலைமையாசிரியர் வையாபுரியிடம் தெரிவித்ததையடுத்து உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளை மீட்டு புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மயக்கமடைந்த குழந்தைகளை சந்தித்து நலம் விசாரித்தார்.

கோட்டாட்சியர், பார்த்திமா அரக்கோணம் போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் அசோக் நெமிலி ஒன்றிய தலைவர், வடிவேலு மற்றும் சைனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News