உள்ளூர் செய்திகள்

100-வது ெஹலிகாப்டர் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித்தாஸ்குப்தா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட காட்சி.

விமான படை தளத்தில் 100-வது ெஹலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா

Published On 2023-06-09 15:28 IST   |   Update On 2023-06-09 15:28:00 IST
  • கடற்படை தளபதி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்
  • வீரருக்கு கேரளா சுழற்கோப்பை வழங்கப்பட்டது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இந்த விமான தளத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று 100-வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் 21 வீரர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித்தாஸ்குப்தா அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் இந்த பயிற்சி காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அனைத்து துறைகளிலும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீரருக்கு கேரளா சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

வீரர்களுக்கு பாதுகாப்பு தான்மிக முக்கியம் பாதுகாப்பை மனதில் கொண்டால் வீரமும் தானாக வரும், வீரமும் பாதுகாப்பும் 2 கைகள்.

தேசத்தில் கடற்படை முக்கிய சேவை ஆற்றி வருகிறது. உற்சாகப்படுத்தி அனுப்புகின்ற ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளையும் வந்திருக்கின்ற அனைவருக்கும் நன்றி என கடற்படை தளபதி கூறினார்.

நிகழ்ச்சியின் போது அரக்கோணம் ஐ.என். எஸ். ராஜாளி கடற்படை விமான தள கமாண்டர் கபில் மேத்தா உடன் இருந்தார்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி மற்றும் கடற்படை வீரர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News