ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்த காட்சி.
ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- பிளாட்பாரம் அருகே பதுக்கி வைத்திருந்தனர்
- போலீசார் விசாரணை
நெமிலி:
பாணாவரம் பகுதியில் சோளிங்கர் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் அடிக்கடி ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக ரெயில்வே பாதுகாப்பு படையினர், ராணிப்பேட்டை பறக்கும் படையினர், வருவாய்த்துறை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சோளிங்கர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை பிளாட்பாரம் அருகே 19 மூட்டைகளில் 1 டன் ரேசன் அரிசியை கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்தனர். இதனை கண்ட அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு தனிப்படையினர் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ராணிப்பேட்டை தாசில்தார் இளஞ்செழியனிடம் ஒப்படைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.