உள்ளூர் செய்திகள்

''குடிமக்கள் கணக்கு எண்'' பிழைதிருத்தம் செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி

Published On 2023-05-17 13:24 IST   |   Update On 2023-05-17 13:24:00 IST
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘‘குடிமக்கள் கணக்கு எண்’’ பிழைதிருத்தம் செய்ய முடியாமல் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
  • இ-சேவை மைய அலுவவலகத்திற்கு சென்றுதான் சி.ஏ.என். நம்பர் கிடைக்க ஆவணம் செய்யப்படுகிறது.

அபிராமம்

கோடைவிடுமுறை முடிந்து பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும்போது அங்கு புதிதாக மாணவ-மாணவிகளை சேர்க்கவும், மேல்வகுப்புகள் படிக்கவும் சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ்கள் தேவையாகும். இந்த சான்றிதழ்கள் பெற ''குடிமக்கள் கணக்கு எண்'' கட்டாயமாக தேவைப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள தாலுகாக்கள், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இ-சேவை மையம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. காப்பரேசன், கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் திட்டம் உள்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகிறது. இங்கு சான்றிதழ் பதிவு செய்ய வரும் மாணவ- மாணவிகள் சி.ஏ.என். நம்பர் பிழைதிருத்தம் செய்ய வேண்டும்.

ஆனால் அந்த வசதி இ-சேவை மையங்களில் கிடையாது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மன உைளச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு வருவாய்துறை சான்றிதழ்கள் பதிவு செய்ய ஆதார் எண் வைத்து ''குடிமக்கள் கணக்கு எண்'' (சி.ஏ.என்.) உருவாக்கம் செய்யப்படும். இந்த எண் உருவாக்கம் செய்ய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மைய அலுவவலகத்திற்கு சென்றுதான் சி.ஏ.என். நம்பர் கிடைக்க ஆவணம் செய்யப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் ஏற்படுவதுடன் நேர விரயம், பண விரயம் உள்பட பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாவதுடன் சான்றிதழ் கிடைப்பதிலும் சிரமத்துடன் அலைய வேண்டியதுள்ளது. இந்த நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News