உள்ளூர் செய்திகள்

மாநில ஊரக வாழ்வாதார இயக்க இளைஞா் திறன் திருவிழா

Published On 2023-03-18 13:22 IST   |   Update On 2023-03-18 13:22:00 IST
  • கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க இளைஞா் திறன் திருவிழா நடந்தது.
  • ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடந்தது.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக ஊரக பகுதியில் வசிக்கும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞா்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் இளைஞா் திறன் திருவிழா முகாம் வட்டார இயக்க மேலாண்மை அலுவகத்தில் நடைபெற்றது.

அரசு அங்கீகாரம் பெற்ற 20-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வழங்கும் நிறுவ னங்கள் கலந்து கொண்டு தாங்கள் வழங்கும் பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்து இளைஞா்களை பயிற்சிக்கு தோ்வு செய்தனா்.

கமுதி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளை சார்ந்த 700-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவா் தமிழ்செல்வி போஸ் மற்றும் திட்ட இயக்குநா் அபிதா ஹனீப் ஆகியோர் தலைமையில் இந்த இளைஞா் திறன் திருவிழா நடைபெற்றது.

இந்த முகாமில் மகளிா் திட்ட அலுவலா்கள் கிருஷ்ணகுமார் (நிதி உள்ளக்கம்), உதவிதிட்ட இயக்குநா் சரவணபாண்டி யன் (திறன்), உதவி திட்ட அலுவலா் கிருஷ்ணன் (என். யு.எல்.எம்.) கலந்து கொண்டனா்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளா்கள் திரவியம், சேதுபதி பில்லத்தியான், மாரிமுத்து சாந்தி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

Tags:    

Similar News