உள்ளூர் செய்திகள்

சிறப்பு தொழில் கடன் முகாம்

Update: 2022-08-15 08:52 GMT
  • மதுரையில் 17-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது.
  • ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 17-ந் ேததி முதல் அடுத்த மாதம் 2-ந் ேததிவரை நடைபெறுகிறது. இதில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மற்றும் மொபைல் எண்கள். 0452-2533331, 87780 40572, 9444396842 மூலமாக தொடர்பு கொண்டு விபரம் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News