குடியரசு தினவிழாவில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.
- ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
- இதில் மாவட்ட கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு, குடியரசின் பெருமையை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையை சேர்ந்த 61 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், 63 பேருக்கு சான்றிதழ்கள், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பொதுச் சேவையில் சிறந்து விளங்கிய தன்னார்வலர்கள் உட்பட மொத்தம் 190 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி னார்.
வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வாழ்ந்து காட்டு வோம் திட்டம், மீன்வளத்துறை, தாட்கோ, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை துறை களின் சார்பில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விலை யில்லா தையல் எந்திரங்கள், சலவை பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் 48 பயனாளி களுக்கு ரூ. 96 லட்சத்து88 ஆயிரத்து 986 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
விழாவில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) பிரதீப்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் பகன் சுதாகர் உள்பட போலீஸ் அதிகாரிகள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.