உள்ளூர் செய்திகள்

பாசிகள் படர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் காட்சி அளிக்கும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான ராமர் தீர்த்த குளத்தை படத்தில் காணலாம்.

ராமர் தீர்த்த குளத்தை தூர் வரவேண்டும்

Published On 2023-10-18 12:12 IST   |   Update On 2023-10-18 12:12:00 IST
  • ராமர் தீர்த்த குளத்தை தூர் வரவேண்டும்.
  • பாசிகளை அகற்றி தூர்வார பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தென்ன கத்து காசி என்று போற்றப் படும் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித ஸ்தல மாகவும் விளங்குகிறது. ஸ்ரீராமர், சீதை, அனுமன் உள்ளிட்ட தெய்வங்கள் சிவ லிங்கம் செய்து பூஜை செய்த இடமாகும். இதனால் இந் தியா அளவில் முக்கியத்து வம் வாய்ந்த கோவிலாக உள்ளது.

எனவே தமிழகம் மட்டு மின்றி வடமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவி லுக்கு வந்து அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியும், கோவிலில் உள்ள 22 தீத்த மாடியும் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபடுகிறார்கள்.

இக்கோவிலுக்கு சொந்த மான ராமர் தீர்த்தம், லெட்சு மண தீர்த்தம் நகரின் முக்கிய பகுதியில் உள்ளது. இதில், இதில் ராமர் தீர்த்த குளத்தில் நாள் தோறும் ஏராளமான வடமாநில பக்தர்கள், தமிழ் நாடு பக்தர்கள் தீர்த்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தீர்த்த குளம் பாசி அடந்து மிகவும் மோச மாக காணப்படுகிறது. இத னால் துர்நாற்றம் வீசி வரு கிறதுய. மேலும் தொற்று நோய் பரவிவிடும் என்ற அச்சத்தில் பக்தர்கள் தீர்த்த குளத்தை பயன்படுத்தவும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனவே ராமர் தீர்த்த குளத்தை தூர்வாரி தூய் மைப்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை உட னடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பக்தர் கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

Tags:    

Similar News