உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை மத்திய இணை மந்திரி கபில்மோரேஸ்வா் பாட்டீல் சந்தித்தபோது எடுத்த படம்.

மத்திய அரசின் 60 சதவீத நிதியில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

Published On 2022-07-07 09:17 GMT   |   Update On 2022-07-07 09:17 GMT
  • மத்திய அரசின் 60 சதவீத நிதியில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் தகவல் தெரிவித்துள்ளார்.
  • அனைத்துத் திட்டங்களுக்கும் 60 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கி வருகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட த்தில் நடந்த பா.ஜனதா கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய இணை மந்திரி கபில்மோரேஸ்வா் பாட்டீல் ராமநாதபுரம் வந்தார்.

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்ற 77 பயனாளிகளை சந்தித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பா.ஜனதா மாவட்டத் தலைவா் கதிரவன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் கபில்மோ ரேஸ்வா் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை பாா்த்து பேசியபோது மகிழ்ச்சியாக இருந்தது.

நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் உயிா்நீா்த் திட்டம், தூய்மை இந்தியா கழிப்பறை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏரா ளமானோா் பயன டைந்துள்ள னா். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் 60 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கி வருகிறது.

தமிழக அரசு தனது நிதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு நிதி மூலமே திட்டங்கள் செயல்படுத்தப்ப ட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News