உள்ளூர் செய்திகள்

வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-11-15 06:48 GMT   |   Update On 2023-11-15 06:48 GMT
  • சாயல்குடி அருகே வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர், கடலாடி தாசில்தார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

சாயல்குடி

சாயல்குடி அருகே ஒப்பிலான் கிராமத்தில் வனத்துறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கட்டிடங்களை கட்டி பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். வனத்துறை பகுதியில் உள்ள பொது மக்களை காலி செய்ய வலியுறுத்தி ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்காக இன்று அதிகாலை வந்த வனத்துறை அதிகாரிகளை கண்டித்து சாயல்குடியில் இருந்து செல்லும் ஒப்பி லான்-வாலிநோக்கம் சாலையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்தும் வனத்துறையினரை முற்று கையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, கடலாடி தாசில்தார் ரெங்கராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர்கள் இருவர் பெட்ரோல் கேனை தலையில் ஊற்றி தீயை பற்ற வைக்க முற்பட்டனர். அவர்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்கிர மிப்புகளை அகற்றக் கூடாது எனவும், வீடு கட்டி இருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி இருந்தனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

முடிவில் தாசில்தார் தற்போது வனத்துறையினர் ஆக்கிரப்புகளை அகற்ற மாட்டார்கள் எனவும், பின்பு ஒரு நாளில் பொது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு அதன் மூலம் நட வடிக்கை எடுத்துக்கொள்வோம் என உத்திர வாதம் அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News