உள்ளூர் செய்திகள்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இரைதேடும் பிளமிங்கோ பறவைகளை படத்தில் காணலாம்.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழ்விட- வலசை வரும் நீர்வாழ் பறவைகள்

Published On 2023-01-31 08:25 GMT   |   Update On 2023-01-31 08:25 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழ்விட- வலசை வரும் நீர்வாழ் பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • 13 இடங்களில் நடந்த கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு அரசு வனத்துறையின் மூலம் மாநில அளவிலான ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதற்காக 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் ஆலோசனையின் படி பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

ஈரம் சார் நிலங்களான சித்திரங்குடி, காஞ்சி ரங்குளம், மனோலி தீவு, அரிச்சல் முனை, பிள்ளைமடம், முனைக்காடு, காரங்காடு, சக்கரக்கோட்டை தேர்த்தங்கால், வாலி நோக்கம், மேல-கீழ செவ்வனூர் பகுதிகளில் மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 7000-க்கும் அதிகமான வாழ்விட மற்றும் வலசை வரும் நீர் வாழ் பறவைகள் கண்டறியப்பட்டன.

அவற்றில் குறிப்பி டத்தக்கவை சைபீரியா, மங்கோலியாவில் இருந்து வலசை வரும் வரித்தலை வாத்து, மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் பூ நாரைகள், வட துருவ பகுதிகளை சார்ந்த எண்ணற்ற உள்ளான் வகை பறவை இனங்கள், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து வரும் படைக்குருவிகள், அரிய வகை கழுகு இனங்கள் கண்டறியப்பட்டன.

இக்கணக்கெடுப்பு பணியில் உதவி வன பாதுகாவலர்கள் சுரேஷ், சுரேஷ் பிரதாப் மற்றும் வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம், மண்டபம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், கீழக்கரை, ராமநாதபுரம் கூடுதல் பொறுப்பு வனச்சரக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன் பறவை ஆர்வலர்களான மதுரை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில், வேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகளும், கமுதி நம்மாழ்வார் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News