உள்ளூர் செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு மாணவர் அறிவியல் பேரவையின் சார்பில் “வானவில் அறிவியல்” விருதினை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கியபோது எடுத்த படம்.

ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகள்

Published On 2023-04-12 08:21 GMT   |   Update On 2023-04-12 08:21 GMT
  • ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
  • ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்க ளிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து மாவட்ட அளவில் நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்று அதில் தேர்வான 4 மாணவ-மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு அறிவியல் பேரவையின் சார்பில் "வானவில் அறிவியல்" விருதினையும் தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி சாதனை படைத்திட வேண்டும் எனவும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்களையும் பாராட்டி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

அப்போது சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி தாளாளர் வாசன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News