உள்ளூர் செய்திகள்

காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் மரியாதை செலுத்தினார்.

மருதுபாண்டியர் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் மரியாதை

Published On 2023-10-28 08:37 GMT   |   Update On 2023-10-28 08:37 GMT
  • மருதுபாண்டியர் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் மரியாதை செலுத்தினர்.
  • வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பரமக்குடி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் 222-வது குருபூஜையையொட்டி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்கள் வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் மேற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கார்த்தி, கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், துணைச் செயலாளர் பசும்பொன் சௌந்தர், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராமு உட்பட சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News