உள்ளூர் செய்திகள்

மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

Published On 2022-11-20 13:58 IST   |   Update On 2022-11-20 13:58:00 IST
  • மழைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
  • வயல்களில் தண்ணீர் இல்லததால் பயிர்கள் கருகிவிட்டது.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள விளை நிலங்களில் நெல், மிளகாய், உளுந்து, பருத்தி உள்ளிட்ட சாகுபடி பணிகள் தொடங்கி தற்போது களை எடுப்பு, பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் பெய்த பருவமழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் உரமிடும் பணிகள் நடக்கிறது. பயிர்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் மழை இல்லாததால் அபிராமம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து நரியன், உடையநாதபுரம், முத்தாதிபுரம் விவசாயிகள் கூறுகையில், பருவமழையை நம்பி வயல்களில் உரமிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. வயல்களில் தண்ணீர் இல்லததால் பயிர்கள் கருகிவிட்டது.

இந்த நிலையில் வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மழை பெய்யும் என்று நம்புகிறோம். மேலும் பருவமழை நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவு பெய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றனர்.

Similar News