உள்ளூர் செய்திகள்

தி.மு.க. பேரூராட்சி தலைவர் பா.ஜ.க.வில் இணைந்ததாக போலி வீடியோ

Published On 2023-08-01 11:57 IST   |   Update On 2023-08-01 11:57:00 IST
  • அண்ணாமலையை நேரில் சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்ததாக போலி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
  • சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு ேபாலி வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தி.மு.க. பேரூராட்சி தலைவர் மாரியப்பன். இவர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்ததாக போலி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் போலி வீடியோவை பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாயல்குடி போலீஸ் நிலையத்தில் பேரூராட்சி தலைவர் மாரியப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து மாரியப்பன் கூறியதாவது:- நான் பனைமர தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளேன். எங்கள் பகுதி மக்களை சந்திக்க வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு ேபாலி வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணைச் சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், வார்டு உறுப்பினர்கள் காமராஜ், அழகர் வேல் பாண்டியன், அமுதா, பானுமதி, சண்முகத்தாய் சுப்பிரமணியன், குமரையா ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News