உள்ளூர் செய்திகள்

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

Published On 2023-09-04 07:22 GMT   |   Update On 2023-09-04 07:22 GMT
  • தொண்டி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
  • குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தொண்டி

தமிழகத்தில் பிரச்சித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தற்போது கொடியேற்றப் பட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாக வேளாங்கண்ணிக்கு செல்கிறார்கள்.

அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் தொண்டி அருளானந்தர் தேவாலயத்தில் வழிபட்டு அங்கிருந்து வேளாங் கண்ணிக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் செல்கின்றனர்.

இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் குளம், திருப்பா லைக்குடி குடிநீர் ஊரணி மற்றும் சாலையோரம் உள்ள நீர்நிலைகள் வறண்டு உள்ளது. இதனால் பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News