உள்ளூர் செய்திகள்

மிளகாய் வத்தல் வணிக வளாகத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-04-26 07:57 GMT   |   Update On 2023-04-26 07:57 GMT
  • மிளகாய் வத்தல் வணிக வளாகத்தில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
  • ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் எட்டிவயல் ஊராட்சியில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் ஒருங்கிணைந்த மிளகாய் வத்தல் வணிக வளாகத்தை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 2 ஆயிரம் மெட்ரிக்டன் குளிர்பதன கிட்டங்கியில் விவசாயிகள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள்-உழவர் உற்பத்தியாளர் குழுவினர் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள 47.80மெ.டன் (2369 மூடைகள்) அளவுள்ள மிளகாய் வத்தல், 12.3மெ.டன் (1315 பெட்டிகள்) அளவுள்ள புளி, .03மெ.டன் தட்டைப்பயறு விளைபொருட்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காதபட்சத்தில் மேற்கண்ட கிட்டங்கியில் வாடகை அடிப்படையில் இருப்பு வைத்து கூடுதல் விலை கிடைக்கும்போது நல்ல விலைக்கு விற்று பயனடையலாம் என தெரிவித்தார். ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News