உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான நெசவாளர் விருது பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

Published On 2023-04-26 07:55 GMT   |   Update On 2023-04-26 07:55 GMT
  • மாநில அளவிலான நெசவாளர் விருது பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
  • பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரகத்தில் 85 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.பரமக்குடியில் 11ஆயிரத்து 257 கைத்தறி நெசவாளர்கள் இயங்கி வருகின்றனர். இந்த பகுதியில் கைத்தறி பருத்தி சேலைகள், செயற்கை பட்டு, காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் மற்றும் பிற விற்பனை யாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு அளவில் மாநில நெசவாளர் விருது பரமக்குடி சரகத்தை சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் சரவணனுக்கு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர் ராமாயண போர் காட்சியை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக முதல் பரிசாக ரூ.5 லட்சமும், சான்றிதழும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றுள்ளார்.

மேலும் கலைமகள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் நாகராஜன் இயற்கை காட்சியை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக 2-ம் பரிசு ரூ.3 லட்சத்தை முதல்வரிடம் இருந்து பெற்றுள்ளார்.

மேற்கண்ட 2 நெசவாளர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெ்டர் ஜானிடாம் வர்கீஸை சந்தித்து முதல்வரிடம் இருந்து பெற்ற பரிசுகளையும், சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பரமக்குடி சரக கைத்தறித்துறை உதவி இயக்குநர் ரகுநாத் உடனிருந்தார்.

Tags:    

Similar News