கிராம மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்த வேண்டும்
- கிராம மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.
- பெரியபட்டினம் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
கீழக்கரை
பெரியபட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 77 ஏக்கரில் அமைந்துள்ள கப்பல்லாற்று நீர்பிடிப்பு பகுதி, 2,200 மீட்டர் நீளம் உள்ள மொரவாய்கால் ஓடை பகுதியை அப்பகுதி தென்னை விவசாய மக்களுக்காகவும், நிலத்தடி நீரை உயர்த்தவும், அப்பகுதியை பராமரிப்பு செய்வதற்கும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெரியபட்டினம் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள் ஆதலால் பெரியபட்டினம் கடற்கரையில் மீன்பிடி தளம் கட்டுவதற்கு ராமநாதபுரம் உதவி இயக்குநர் (மீன்வளத்துறை தெற்கு) பரிந்துரை செய்ய வேண்டும்.
தெற்கு புதுகுடியிருப்பு மற்றும் குருத்தமண்குண்டு ஆகிய கிராமங்களில் உள்ள பொது மயானத்திற்கு பாதை வசதி செய்ய இடம் தேர்வு செய்து தர கீழக்கரை வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
தங்கையா நகர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும். காயிதேமில்லத் நகர் கிழக்கு பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியை அகற்றி புதிய மின் கம்பி இணைப்பு அமைக்க வேண்டும். தெற்கு புதுகுடியிருப்பு கிராமம் செல்லும் வழியிலும், குறுத்த மண்குண்டு பகுதிக்கு தெற்கு புதுகுடியிருப்பு சாலையிலிருந்து தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும்.
பெரியபட்டினம் ஊராட்சி காயிதேமில்லத் நகர் மற்றும் மிலால் நகர் பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கவுன்சிலர் பைரோஸ்கான் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.