உள்ளூர் செய்திகள்

கால்வாய் அடைப்புகளை பொக்லைன் வைத்து அப்புறபடுத்திய காட்சி

திருக்கழுகுன்றத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பால் மழைநீர் தேக்கம்: உடனடியாக அகற்ற நோட்டீஸ்- பேரூராட்சி தலைவர் யுவராஜ் அதிரடி

Published On 2022-11-17 16:24 IST   |   Update On 2022-11-17 16:24:00 IST
  • தூர்வாரும் பணி மேற்கொண்டபோது கால்வாய் மீது ஆக்கிரமிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • கால்வாய் ஆக்கிரமிப்பை உடனடியாக தாங்களே முன்வந்து அகற்றிவிடும்படி நோட்டீஸ்

மாமல்லபுரம்:

திருக்கழுகுன்றம் பேரூராட்சி மேட்டு தெரு பகுதியில், பொதுப்பணித்துறை கால்வாய் அடைத்து மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையும் உருவானது.

இதனால் பேரூராட்சி தலைவர் யுவராஜ், செயல் அலுவலர் ஜெயக்குமார், துணைத்தலைவர் அருள்மணி உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று, பொக்லைன் வைத்து தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 15 அடி கால்வாய் மீது ஆக்கிரமிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கால்வாய் ஆக்கிரமிப்பை உடனடியாக தாங்களே முன்வந்து அகற்றிவிடும்படி, ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர்களுக்கு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மீதி இடங்களில் இருந்த குப்பை மற்றும் அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றினர்.

Similar News