உள்ளூர் செய்திகள்

ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகளை படத்தில் காணலாம்.

ரேக்ளா பந்தயம் சீறிப்பாய்ந்த குதிரைகள்

Published On 2022-07-18 08:58 GMT   |   Update On 2022-07-18 09:01 GMT
  • உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 44 இன்ச் குதிரை, பெரிய குதிரை என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
  • வெற்றி பெற்ற குதிரைகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

குமாரபாளையம்:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் தி.மு.க. சார்பில் ரேக்ளா பந்தயம் நகர செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 44 இன்ச் குதிரை, பெரிய குதிரை என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

குமாரபாளையம் காவேரி நகர் முதல் அண்ணமார் கோவில் வரை 10 கி.மீ. தொலைவு எல்லைக்குள் இந்த போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உள்ளூர் குதிரை போட்டியில் லோகு முதலிடமும், பெரியாண்டி அம்மன் 2-ம் இடமும், மாதம்மாள் 3-ம் இடமும், சிங்காரவேல் 4-ம் இடமும் பெற்றனர். புதிய குதிரைக்கான போட்டியில் சேலம் சந்திரன் முதலிடமும், பவானி செல்லவேலு 2-ம் இடமும், செல்டா 3-ம் இடமும், சிங்காரவேல் 4-ம் இடமும் பெற்றனர்.

44 இன்ச் போட்டியில் சிங்காரவேல் முதலிடமும், ஆத்தூர் குண்டு 2-ம் இடமும், சிங்காரவேல் 3-ம் இடமும், டாலிகிங் நான்காம் இடமும் பெற்றனர். பெரிய குதிரைக்கான போட்டியில் மூர்த்தி முதலிடமும், சிங்காரவேல் 3-ம் இடமும், சப்பாணி கருப்பட்டி 3-ம் இடமும், சந்திரன் 4-ம் இடமும் பெற்றனர்.

இதில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நகர அவை தலைவர் ஜெகநாதன்,தொழிலதிபர் ராஜாராம், கவுன்சிலர் சத்தியசீலன், ரங்கநாதன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பந்தய ஒருங்கிணைப்பு, பந்தய மேற்பார்வை பணிகளை ஸ்ரீகற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியை தி.மு.க. நிர்வாகி ராஜ்குமார் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News