உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குள் புகுந்து 19 பவுன் நகை கொள்ளை

Published On 2023-10-17 13:58 IST   |   Update On 2023-10-17 13:58:00 IST
கந்தர்வகோட்டையில் நள்ளிரவு துணிகர சம்பவம்வீட்டுக்குள் புகுந்து 19 பவுன் நகை கொள்ளை

கந்தர்வகோட்டை 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரவன்பட்டியை சேர்ந்தவர் கண்ணதாசன்(வயது 40). விவசாயியான இவர் வழக்கம் போல தனது தாயுடன் இரவு உணவு உண்ட பின்பு, தூங்கி உள்ளார். வீட்டு வேலையை முடித்து கொண்டு தாய் அமராவதியும் படுத்து தூங்கி உள்ளார்.

இருவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்த, நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவை உடைக்காமல் லாவகமாக திறந்த மர்ம நபர், வீட்டுக்குள் புகுந்து உள்ளான். பின்னர் பீரோவை சத்தமில்லாம் உடைத்து திறந்து அதில் இருந்த 19 நகையை திருடி உள்ளான். திருடிய நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய போது கண்ணதாசனின் தாய், கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின் திருடனின் கண்ணை உறுத்தி உள்ளது.

இதனால் மீண்டும் கை அரிப்பு எடுத்தவனாய் தூங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனின் தாய் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயற்சித்துள்ளார். இதனை உணர்ந்த கண்ணதாசனின் தாய், விழித்தெழுந்து திருடனை பார்த்து சத்தமிட்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த மர்மநபர் பின்வாசல் வழியாக தப்பி சென்று உள்ளான். சத்தம் கேட்டு விழித்தெழுந்த கண்ணதாசனும், ஓடி வந்த அக்கம் பக்கத்தினரும், நான்குபுறமும் திருடனை தேடி அலைந்து உள்ளனர். மேலும் அக்கிராமத்து இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கிராமத்தில் இருந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் தேடி அலைந்துள்ளனர்.

விடியவிடிய தேடி அைலந்தும் கொள்ளையன் சிக்கவில்லை. எனவே இது குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆளில்லாத வீட்டில் கொள்ளை சம்பவம் நடப்பது வழக்கமாக உள்ள இந்நிலையில் தற்போது ஆள் இருக்கும்போதே கொள்ளை சம்பவம் நடந்தே றியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News