உள்ளூர் செய்திகள்

ெசன்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

Published On 2022-08-26 06:37 GMT   |   Update On 2022-08-26 06:37 GMT
  • ெசன்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
  • வரும் 12-ந் தேதி தொடங்குகிறது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தார்சாலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க சுற்றுச்சு வர் மருத்துவமனை ஆய்வகம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் வருகிற செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. 150 நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் போட்டியை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசும், தமிழக டென்னிஸ் சங்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மின்விளக்குக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.1.5 கோடியில் மைதானத்த சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மைதானத்தில் ஓராண்டு காலத்துக்குள் 8 புதிய டென்னிஸ் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் பெரும் அச்சுறுத்தை ஏற்படுத்தி வருவதால் நீர் நிலைகளை மாசுபடுத்தாத வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீர் நிலையை பாது காக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிநாட்டு மரங்களை தமிழகத்தில் நடுவதற்கு கோர்ட் தடை விதித்துள்ளது. அதன்படி வனத்துறை அமைச்சகம் சார்பில் வனங்கள் நிறைந்த பகுதிகளில் வெளிநாட்டு மரங்களை அகற்றுவ தற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விரைவில் நடவடிக்ைக மேற்கொள்ளப்படும்.

விதிகளைமீறி செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்து தவறு நடந்திருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Tags:    

Similar News